தமிழில் பாடகராக அறிமுகமான இந்தி இசையமைப்பாளர்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (10:58 IST)
இந்தி சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள், இரட்டையர்களான சலீம் - சுலைமான். இதில் சலீம் தமிழில் வெளியாகவிருக்கும் கோ 2 படத்தில் கண்ணம்மா எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.


 

கோ 2 படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சலீம் அவரது இசையில் பாடியது குறித்து பேசிய லியோன் ஜேம்ஸ்,

"கண்ணம்மா பாடலின் மெட்டை அமைக்கும் போதே  இந்த பாடலை சலீம் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். என் எண்ணத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் தெரிவித்தேன். அவரும் சற்றும் தயங்காமல், அதனால் என்ன பாடல்கள் தான் மக்களுக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டும். ஆகவே இந்தப் பாடல் வெற்றி பெறும் என்றால் யாரை வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள் என்றார்.

நானும் பாடல் வரிகளுடன் மெட்டையும் மின்னஞ்சல் வழியாக சலீமுக்கு அனுப்பினேன். அவரும் உடனடியாக எப்போது பதிவு செய்யலாம் எனக் கேட்டதோடு வந்து பாடியும் கொடுத்தார். இன்று கண்ணம்மா பாடல் இந்த அளவுக்கு வெற்றிப் பெற்றதற்கு அவர் தான் காரணம்" என்றார்.

கோ 2 படத்தில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்