கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ மாபெரும் வெற்றியை பெற்றது என்ற ஒரே காரணத்துக்காக, பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடித்துள்ள படத்துக்கு கோ 2 என பெயர் வைத்துள்ளனர்.
கூடுதல் தகவல், தெலுங்கில் வெளியான, பிரதிநிதி என்ற படத்தையே கோ 2 என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். தெலுங்குப் படத்தை பிரசாத் மாதவா இயக்கினார். தமிழ்ப் படத்தை சரத் மாதவா இயக்கியுள்ளார்.