சவாலே சமாளியாக மாறிய கெக்கே பிக்கே

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (21:07 IST)
தெகிடி, பீட்சா 2 வில்லா படங்களில் நடித்த அசோக் செல்வனின் புதிய படத்துக்கு சவாலே சமாளி என பெயர் வைத்துள்ளனர்.
 

 
கழுகு கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகியிருக்கும், சவாலே சமாளி படத்தை அருண்பாண்டியன் தயாரித்துள்ளார். தமன் இசையமைக்க சிநேகன் பாடல்கள் எழுதியுள்ளார். மொத்தம் 5 பாடல்கள்.
 
அசோக் செல்வன் ஜோ‌டியாக பிந்து மாதவி நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு முதலில் கெக்கே பிக்கே என்றுதான் பெயர் வைத்திருந்தனர். அது ரொம்பவே விளையாட்டுத்தனமாகத் தெரிந்ததால், சவாலே சமாளி என மாற்றியுள்ளனர்.
 
கெக்கே பிக்கேக்கும் சவாலே சமாளிக்கும் என்ன சம்பந்தம்?
 
காமெடி படம் என்பதால் கெக்கே பிக்கே என பெயர் வைத்தனர். படத்தின் நாயகன் பல சவால்களை சந்திப்பதால் அதனை சவாலே சமாளி என மாற்றியுள்ளனர்.
 
சவாலே சமாளி 1971 -இல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த படம். அதன் தலைப்பை பலநாள் போராட்டத்துக்குப் பிறகே அப்படம் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கியுள்ளனர். செப்டம்பரில் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்