சுனாமி நினைவுதினத்தில் வெளியாகும் கயல்

வெள்ளி, 14 நவம்பர் 2014 (11:24 IST)
பிரபுசாலமன் இயக்கியிருக்கும் கயல் திரைப்படம் சுனாமி நினைவு நாளான டிசம்பர் 26 வெளியாகிறது.
 
2004 டிசம்பர் 26 -ஆம் தேதி சுனாமி அலைகள் கடற்கரையோர மக்களை காவு கொண்டன. ஆயிரக்கணக்கானவர்கள் சுனாமிக்கு இரையானார்கள். அந்த வருடத்தில் நடக்கும் காதல் கதையாக கயல் உருவாகியுள்ளது. படத்தில் சுனாமி காட்சிகள் பிரதானமாக வருகின்றன. 
 
அறிமுக நடிகர் சந்திரன் மற்றும் ஆனந்தி நடித்துள்ள இந்தப் படத்தை பிரபுசாலமனின் காட் பிக்சர்ஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
படத்தின் மையமே சுனாமி சோகம் என்பதால் டிசம்பர் 26 சுனாமி நினைவுநாளில் படத்தை வெளியிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்