காவியத்தலைவன் கே.பி.சுந்தராம்பாளின் காதல் கதை கிடையாது

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2014 (09:51 IST)
வசந்தபாலன் காவியத்தலைவன் படத்தை ஆரம்பிக்கும் முன்பே அப்படம் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பாவின் காதல் கதை என்றொரு பேச்சு இருந்தது. அதனை வசந்தபாலன் மறுத்துள்ளார்.

காவியத்தலைவன் கே.பி.சுந்தராம்பாள் - கிட்டப்பா காதல் கதை கிடையாது. மதுரையை பின்னணியாகக் கொண்ட இரு நாடகக் கம்பெனிகளைப் பற்றியது. அதிலும் முக்கியமாக ஒரே வயதையொத்த இரு திறமையான நடிகர்களின் வாழ்க்கையை பற்றியது என்றார்.

இந்தப் படத்தின் நாயகன் சித்தார்த். தலைவன்கோட்டை காளியப்பா பாகவதர் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பிருத்விராஜுக்கு மேலசீவல்பேரி கோமதி நாயகம் பிள்ளை என்ற கதாபத்திரம். இவர்கள் இருவரின் குருவாக நாசர் தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளை ஞாபகப்படுத்தக் கூடிய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேதிகாவின் ஞானகோகிலம் வடிவாம்பாள் கதாபாத்திரம் கே.பி.சுந்தராம்பாளை நினைவுப்படுத்தும் என வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்