கட்டப்பாவ காணோம் - அப்பாவின் நிழலில் அபயம் தேடும் சிபி

செவ்வாய், 14 ஜூன் 2016 (13:12 IST)
சத்யராஜின் மகனாக மட்டும் இல்லையென்றால் சிபி நடிகராகியிருப்பாரா என்பதே பெரும் கேள்விக்குறி. அவர் நடித்தப் படங்களும் அப்படியொன்றும் வெற்றி பெறவில்லை.


 


பல வருடங்கள் கதை கேட்டு நடித்த, நாய்கள் ஜாக்கிரதையே சுமாராகத்தான் போனது. அதையும் அவரது தந்தை சத்யராஜே தயாரிக்க வேண்டி வந்தது.
 
தனி நாயகனாக எந்தப் படமும் இல்லாத நிலையில், மணி செய்யோன் என்பவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். மணி செய்யோன் ஈரம் அறிவழகனிடம் இணை இயக்குனராக இருந்தவர். 
 
சிபியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படத்தில் மீன் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. நாய்களைப் போலவே மீன்களுக்கும் மனிதர்களை அடையாளம் காணும் சக்தி உண்டு. மீன்களை பிரதானப்படுத்தவே இந்த கதையை எழுதினேன் என்று மணி செய்யோன் கூறினார். 
 
இந்தப் படத்துக்கு கட்டப்பாவ காணோம் என்று பெயர் வைத்துள்ளனர். 
 
பாகுபலி படத்தில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் செம பிரபலம். அதனால், அதையே படத்தின் பெயராக்கியிருக்கிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்