கரு பழனியப்பன் நடித்த ‘கள்ளன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 9 மார்ச் 2022 (18:23 IST)
இயக்குநர் கரு பழனியப்பன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கள்ளன் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 நீண்ட இடைவெளிக்கு பின்னர் கரு பழனியப்பன் நடித்த திரைப்படம் கள்ளன். இந்த படத்தை சந்திரா தங்கராஜ் என்பவர் இயக்கி இருந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது
 
இந்த நிலையில் இந்த படம் மார்ச் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கருபழனியப்பன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நிகிதா மற்றும் மாயா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். 
 
மேலும் தினேஷ் சுப்பராயன், சௌந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். கே இசையமைத்திருக்கும் இந்த படம் கரு பழனியப்பனுக்கு வெற்றிப்படமாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்