கார்த்திக், வைபவ் இணையும் ஜிந்தா

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:02 IST)
அனேகன் படத்தில் ரீ என்ட்ரியான கார்த்திக்குக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பு ஜிந்தா. இந்தப் படத்தில் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறார்.
 
ஜிந்தாவை இயக்குனர் வஸந்தின் உதவி இயக்குனர் எஸ்.கே.வெற்றி செல்வன் இயக்குகிறார்.

உற்சாகமும் துள்ளலும் நிறைந்த கதையிது என்று சொல்லும் வெற்றி, படத்தின் நாயகியாக தேர்வு செய்திருப்பது, சுஷ்மா ராஜ். இவர் இந்தியா பாகிஸ்தான் படத்தின் நாயகி.
 
ரஹ்மானின் சகோதரி மகன் ஹசார் காசிப் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். எஸ்.ஏ.எப்.சினிமாஸ் தயாரிப்பு.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்