கார்த்தி, நாகார்ஜுன் நடிப்பில் பிவிபி சினிமாஸ் தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தது. சமீபத்திய செய்தி, பிரெஞ்சில் வெளியான த இன்டச்சபிள்ஸ் (Intouchables) படத்தின் உரிமையை வாங்கி தமிழ், தெலுங்கில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
இந்தப் படம் 2011 செப்டம்பரில் திரைக்கு வந்தது. அதே வருடம் டிசம்பரில் இதே கதையமைப்புடன் மலையாளத்தில் பியூட்டிஃபுல் என்ற திரைப்படம் வெளியானது. கழுத்துக்கு கீழ செயல் இழந்த நிலையில் எப்போதும் படுக்கையில் இருப்பவர் ஜெய்சூர்யா. பணக்காரர். அவருக்கும் இசைக்கலைஞரான அனுnப் மேனனுக்கும் ஏற்படும் நட்பே படத்தின் பிரதான அம்சம்.