விநாயகர் சதுர்த்திக்கு கபாலி முதல் பார்வை?

புதன், 26 ஆகஸ்ட் 2015 (10:01 IST)
கபாலி படத்தின் போட்டோஷுட்டை நடத்தி முடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் 18 -ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 17 -ஆம் தேதி படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


 

 
பொதுவாக ரஜினி நடிக்கும் படங்களுக்கு போட்டோஷுட் நடத்துவதில்லை. நேராக படப்பிடிப்புதான். கபாலி கொஞ்சம் வித்தியாசம்.
 
அதற்கு காரணம், ரஜினியின் வித்தியாசமான கெட்டப். கபாலியில் சென்னை தாதாவாக வருகிறார். அதுவும் வயதானவராக.
 
கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவர் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் தோன்றவுள்ளார். அந்த கெட்டப்பில்தான் போட்டோஷுட்டும் எடுக்கப்பட்டிருக்கிறது.
 
ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் கலையரசன், அட்டகத்தி தினேஷ், ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்