மருத்துவமனையிலும் அராஜகம் செய்யும் கனிகா கபூர் – மருத்துவர்கள் அதிருப்தி !

திங்கள், 23 மார்ச் 2020 (10:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் அங்கு மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதை மதிக்காமல்  லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், நடந்த பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார். தற்போது கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வசுந்தராராஜே மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டதாலும் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே.திமான் ‘மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் குழந்தைத் தனமாக அடம்பிடிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு நோயாளியாக நடந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு ஸ்டார் போல நினைத்துக் கொள்ளக் கூடாது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்