கங்காரு பிரியங்காவின் கண்ணீர் கதை

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (14:10 IST)
தலைப்பைப் படித்து ஏடாகூடமாக கற்பனை செய்ய வேண்டாம். இதுவெறும் படப்பிடிப்பு அனுபவம்தான்.
 
கங்காரு படத்தில் குட்டி கங்காருவாக அதாவது தங்கையாக நடித்திருப்பவர் பிரியங்கா. அவர் படத்தின்அனுபவம் பற்றிக் கூறும் போது,
 
"நான் நடித்த முதல்படம் அகடம் கின்னஸ் சாதனைப் படம். அடுத்த படம்தான் கங்காரு. இது, நல்ல கதைக்காக சிறந்த நடிப்புக்காக பேசப்பட இருக்கும் சாதனைப் படம் என்பேன்.
என் கேரக்டரில் நடிக்க பலர் வந்து இருந்தாலும் என்னையே சாமி சார் தேர்வு செய்தார். காரணம் தேர்வு செய்யும் போது ஸ்டில்ஸ் எடுத்தார்கள்.  வசனம் பேசச் சொன்னார். ஒரு எமோஷனல் சீனை நடித்துக் காட்டச் சொன்னார். நடித்துக் காட்டினேன். அதுவும் கிளிசரின் இல்லாமல் நடித்துக் காட்டினேன். அவ்வளவுதான், அது பிடித்துப் போய், சாமி சார் 'நீதான் குட்டி கங்காருவா நடிக்கிறே' என்றார். 
 
அதேபோல் படப்பிடிப்பு தொடங்கி 2-வது நாளே ஒரு காட்சி. என் காதலர் இறந்து விடுவார்.
 
படிகளில் ஓடிவந்து அழ வேண்டும். படி சறுக்கி கைகளில் அடிபட்டு சிராய்த்து விட்டது. அப்போதும் கிளிசரின் இல்லாமல் அழுதேன். நான் நடித்ததைப் பார்த்து யூனிட்டே கண் கலங்கியது" என்றார்.
 
கங்காரு கண்ணீர் காவியமாக இருக்குமோ?

வெப்துனியாவைப் படிக்கவும்