பிரபாகரனின் தம்பிகள் தப்பாகவா படமெடுப்போம்?

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (17:46 IST)
கங்காரு இன்று வெளியாகியுள்ளது. அதேநேரம், படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

 
"ஒரு படத்தைப் பார்க்காமலேயே, அதன் கதை, காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே படத்துக்குத் தடை கோரும் போக்கு இன்று அதிகரித்துவருகிறது. என் கங்காரு படத்துக்கு எதிராகவும் அப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
கங்காரு படம் அண்ணன் தங்கைப் பாசத்தை புதிய பரிமாணத்தில் சொல்லியிருக்கும் படம். துளி கூட ஆபாசமற்ற, சுத்தமான படம் என்று தணிக்கைக் குழுவால் 'யு' சான்றளிக்கப்பட்ட படம். 
 
படத்தைப் பார்த்த அத்தனைப் பேரும் பாராட்டுகிறார்கள். ஆனால் படத்தையே பார்க்காமல், இவர்களாக ஒரு கருத்தை கற்பனை செய்து கொண்டு படத்துக்கு தடை கேட்கிறார்கள். இது என்ன வகை நியாயம்?
 
உறவின் பெருமையையும் மேன்மையையும் சொல்லும் படம்தான் இந்த கங்காரு. 
 
உலகுக்கே கலாச்சாரத்தைக் கற்றுத் தந்தது தமிழினம். அந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படி திரைப்படம் எடுக்க வேண்டும் என எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. பிரபாகரனின் தம்பிகளால் கலையுலகம் தலை நிமிருமே தவிர, இம்மியளவு தலைகுனிவு கூட ஒருநாளும் நேராது."
 
-இவ்வாறு அந்த அறிக்கையில் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்