விஜய்யின் உடல் முழுவதும் ஸ்கேன்? 'விஜய்68' பட முக்கிய தகவல்
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (14:09 IST)
விஜய் நடிப்பில் உருவாகவுள்ள விஜய்68 படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிக்கவுள்ள விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், கேப்டன் மில்லர் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி இப்படத்தில் இணைந்துள்ளனர்.
தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முற்சிகள் செய்து வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுக்க வெளிநாடு சென்றிருக்கிறார்.
இதற்காக விஜய், வெங்கட்பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரித்திற்குச் சென்றுள்ளனர். அங்குள்ள 3 டி விஎஃஎக்ஸ் ஸ்கான் தொழில் நுட்பமுறையில் விஜய்68 பட டெஸ்ட் லுக் எடுக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்து, விஜய்யின் தோற்றத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைப்பு செய்யவே, ஸ்கேன் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதுபோன்று ஏற்கனவெ, கமல்ஹாசனின் இந்தியன் 2, ஷாருக்கானின் பேன் ஆகிய படங்கள் இந்த ஸ்கேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், விஜய் 68 படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.