கமல்- பா ரஞ்சித் இணையும் படம் எப்போது தொடங்கும்? சமீபத்தில் நடந்த சந்திப்பு!

சனி, 10 செப்டம்பர் 2022 (09:51 IST)
விக்ரம் வெற்றிக்குப் பிறகு தற்போது இந்தியன் 2 மற்றும் பிக்பாஸ் சீசன் 6 ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், இந்தியன் 2, மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளாகவே கமல் – பா ரஞ்சித் இருவரும் இணையும் படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதை இருவருமே உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ரஞ்சித் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து கதையை விவரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்