செப்டம்பரில் விசாகப்பட்டணத்தில் படப்பிடிப்பை தொடங்கும் கமல்

புதன், 17 ஆகஸ்ட் 2016 (18:38 IST)
ஓய்வறியாத சூரியன் என்றால் அது கலைஞர் கருணாநிதி. அடுத்து கமல்ஹாசன். கால் எலும்பு முறிவு காரணமாக காலில் சக்கரம் கட்டி திரியும் கமல் ஓய்வில் இருக்கிறார். பிஸியோதெரபி போன்ற மருத்துவச் சிகிச்சை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 

 
இந்நிலையில், செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் விசாகப்பட்டணத்தில் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். யுஎஸ் ஷெட்யூல்டை முடித்தவர், விசாகப்பட்டண ஷெட்யூல்டை தொடங்கவிருந்த போதுதான் மாடிப்படியிலிருந்து விழுந்து காலை உடைத்துக் கொண்டார்.
 
செப்டம்பர் இரண்டாம் வாரத்துக்குள் தானாகவே நடக்க, ஓட ஆரம்பித்துவிடுவார் கமல் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்