உலக நாயகன் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ, இந்த படத்திற்கு தடங்கல் மேல் தடங்கல் வந்து காலதாமதம் ஆகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு 'உத்தம வில்லன்', பாபநாசன்' தூங்காவனம் என மூன்று படங்களை வெளியிட முடிந்த கமல்ஹாசனால் 2016ஆம் ஆண்டு ஒரு படத்தை கூட வெளியிட முடியவில்லை.
பின்னர் ஒரு வழியாக படபிடிப்பை தொடங்க நாள் குறித்த நிலையில் எதிர்பாராதவிதமாக மாடிப்படியில் இருந்து கீழே விழுந்த கமலுக்கு கால்முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் பூரண குணம் அடைந்துவிட்டாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக இருக்கும் ஸ்ருதிஹாசனின் தேதிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் தேதிக்காக காத்திருப்பதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடரும் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.