இந்த மாதத்தில் நிறைவடையும் தூங்கா வனம்

புதன், 1 ஜூலை 2015 (11:19 IST)
உத்தம வில்லனைத் தொடர்ந்து கமல் அவசர அவசரமாக தொடங்கிய படம், தூங்கா வனம். ஸ்லீப்லெஸ் நைட் பிரெஞ்ச் படத்தின் அதிகாரப்பூர்வமான இந்தத் தழுவலை சென்ற மாதம் தொடங்கினார். இந்த மாத இறுதிக்குள் படம் நிறைவடைகிறது.
ஒரே இரவில் நடக்கும் கதைதான் தூங்கா வனம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. கமலுடன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர், ஆஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை.
 
கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கும் இந்தப் படம் இந்த மாதமே முடிவடைகிறது. ஆகஸ்டில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்