மலையாளப் படத்தில் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை

திங்கள், 28 நவம்பர் 2016 (17:13 IST)
காக்கா முட்டை படத்தில் சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவரும் பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன், தம்பியாக நடித்தார்கள்.


 
 
இவர்கள் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றனர். மலையாளத்திலும் இவர்களுக்கு ஆஃபர் வந்துள்ளது.
 
காக்கா முட்டை பாணியில் வித்தியாசமான கதையில் உருவாகி வரும் மலையாளப் படம் ஒன்றில், இரண்டு பேரும் அண்ணன், தம்பியாகவே நடிக்கிறார்கள். 
 
கடந்த 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விக்னேஷ், ரமேஷ் இருவரும் கேரளாவில் தங்கி இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்