ரோம் திரைப்பட விழாவில் பங்கேற்கும் மணிகண்டனின் காக்கா முட்டை

வியாழன், 2 அக்டோபர் 2014 (14:39 IST)
அறிமுக இயக்குனர் மணிகண்டன் வடசென்னையைச் சேர்ந்த சிறுவர்களை வைத்து இயக்கிய படம் காக்கா முட்டை. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்து வருகிறது.
அக்டோபர் 16 -ஆம் தேதி தொடங்கும் ரோம் சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் பங்கேற்கிறது. தமிழ் சினிமா ஒன்று அதன் தரம் காரணமாக சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ச்சியாக பங்கேற்பதும் பரிசுகள் வெல்வதும் இப்போதுதான் சாத்தியமாகியிருக்கிறது. 
 
தமிழ் சினிமாவை சர்வதேச உயரத்துக்கு எடுத்துச் சென்ற இயக்குனர் மணிகண்டன் பாராட்டுக்குரியவர். காக்கா முட்டை இன்னும் தமிழகத்தில் வெளியாகாமல் இருப்பதுதான் ஒரே குறை.

வெப்துனியாவைப் படிக்கவும்