மணிகண்டன் இயக்கத்தில் உருவான படம், காக்கா முட்டை. வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து காக்கா முட்டையை தயாரித்தனர். விருதுக்கென்றே தயாரிக்கப்பட்ட படம் இது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் இப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், பார்வையாளர்கள் தேர்வு செய்த சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர்களுக்கான ஜுரி விருது என மூன்று விருதுகளை வென்றதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.