குழலினிது யாழினிது காஜலின் குரலும் இனிது

சனி, 9 ஜனவரி 2016 (09:46 IST)
ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் என்று அழகிய நடிகைகளை பாடகியாகவும் அறிமுகப்படுத்தும் தென்னிந்திய சினிமா காஜல் அகர்வாலையும் பாடகியாக்கியிருக்கிறது.


 

 
'சக்ரவியூகா' கன்னட படத்தில் காஜல் அகர்வால் முதல்முறையாக ஒரு பாடல் பாடியுள்ளார்.
 
புனித் ராஜ்குமாரின் 25 -வது படமான இதற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில்தான் காஜல் அகர்வால் தனது இனிப்பு குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
 
இனி தொடர்ந்து தமிழ், தெலுங்குப் படங்களில் பாட அவருக்கு இசையமைப்பாளர்கள் வாய்ப்பு தருவார்கள். டி.இமான், தேவி ஸ்ரீபிரசாத் எல்லாம் வேறு எதற்கு இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்