அம்மாவாக போகும் காஜல் அகர்வால் - இனி சினிமாவுக்கு டாட்டா!

புதன், 10 நவம்பர் 2021 (19:20 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாராம். அதற்காக புது படங்களில் கமிட்டாவதை நிறுத்திவிட்டதோடு ஏற்கனவே காமிட்டாகி நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் உள்ளிட்டவற்றில் இருந்து விலகிக்கொண்டாராம். விரைவில் குட்டி காஜலை ரசிகர்கள் பார்த்து மகிழ்வார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்