மே மாதம் திரைக்கு வரும் கபாலி

செவ்வாய், 26 ஜனவரி 2016 (12:49 IST)
கபாலி படத்தை மே மாதம் வெளியிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.


 
 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ஜான் விஜய் நடித்துவரும் கபாலியின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது. ரஜினி அல்லாத காட்சிகளை படமாக்கி வருகின்றனர். பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் கபாலி படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 28 -ஆம் தேதியோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது.
 
அடுத்த மாதம் படப்பிடிப்பு முடியும் என்பதால் ஏப்ரலில் பாடல்களை வெளியிட்டு, மே மாதம் படத்தை வெளியிடுகின்றனர்.
 
கபாலிக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்