கபாலி அதிக கட்டணத்துக்கு விற்றது நியாயமே இல்லை - சொல்வது ரஞ்சித்

வியாழன், 28 ஜூலை 2016 (15:14 IST)
இயக்குனர் ரஞ்சித் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், கபாலி டிக்கெட் அதிக கட்டணத்துக்கு விற்றது பற்றி கேட்கப்பட்டது.


 


அதற்கு பதிலளித்த அவர், "டிக்கெட் அதிக விலைக்கு விற்றதில் நியாயமே இல்லை. காசி தியேட்டரில் நான் படம் பார்த்த போது ரசிகர்கள் என்னிடம் இது பற்றி பேசினார்கள். அவர்களின் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கள்ள சந்தையில் டிக்கெட்டை விற்றிருக்கிறார்கள். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. டிக்கெட்டை அதிக கட்டணத்துக்கு விற்பதில் எனக்கு உடன்பாடில்லை" என்று கூறினார்.
 
ரஞ்சித் சொல்வது போல், கள்ள மார்க்கெட்டில் விற்கவில்லை. கவுண்டரிலேயே அதிக கட்டணத்துக்கு டிக்கெட் விற்றார்கள். பல திரையரங்குகளில் இணையத்திலேயே 2,00 300 ரூபாய்களுக்கு விற்றார்கள்.
 
எல்லாம் முடிந்த பிறகு கண்டிக்கிறேன் என்பது கண் துடைப்பு. நடந்து முடிந்த கொள்ளையின் அனைத்து சாதகங்களையும் அனுபவித்துவிட்டு, பேட்டிகளில் ஐயோ பாவம் என்பதில் எந்த நியாயமும் இல்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்