ஒரு படம் சூப்பர்ஹிட் என்பதை சொல்லாமல் சொல்ல, படத்தின் இந்தி, தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்க க்யூகட்டி நிற்பதாக புளுகுவார்கள். யுடிவி தனஞ்செயன் இதில் சமர்த்தர். யுடிவி தயாரித்த லிங்குசாமியின் வேட்டை பிளாப்பான போது, படத்தைப் பார்த்த யுடிவி ஓனர் அப்படியே உருகிப்போனதாகவும், உடனே வேட்டையை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும் அடித்துவிட்டார். அதேபோல், விஷ்ணுவர்தனின் யட்சன் அட்டர் ப்ளாப்பான போதும், இந்தியில் படத்தை ரீமேக் செய்ய சிலர் துடிப்பதாக தோல்விக்கு நெம்புகோல் போடப்பார்த்தார்.
ஆனால், கபாலி அந்தளவு இல்லை. இதுவரை உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. அது ரஜினி என்ற தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி, படத்துக்கோ படத்தின் கதைக்கோ கிடைத்ததில்லை என்பதை நாடறியும். அப்படியிருக்க கபாலியை இந்தியில் ரீமேக் செய்வதாகவும், அமிதாப் நடிப்பதாகவும் சொல்லப்படுவதெல்லாம் கடைந்தெடுத்த டுபாக்கூர் செய்திகள்,