கபாலியை முந்தியதா தெறி...? - கலவர கான்ட்ரவர்ஸி

வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (13:26 IST)
ரஜினிகாந்த்தின் கபாலி படத்தின் வியாபாரத்தை விஜய்யின் தெறி முந்தியதாக ஒரு வதந்தி உலவுகிறது.


 


கேட்டவுடன் சிரிக்க வைக்கும் வதந்திதான் என்றாலும், அவர்கள் சொல்லும் வியாபார ஏரியா கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது.
 
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஏன் வெளிநாடுகளிலும் ரஜினி படத்தைதான் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். இங்கெல்லாம் ரஜினிதான் சூப்பர் ஸ்டார். ஆனால், கேரளாவில் விஜய்தான் சூப்பர் ஸ்டார். அவர் படத்துக்குதான் மற்ற அனைத்து தமிழ் நடிகர்களைவிடவும் அதிக வியாபாரம். ரஜினிக்கே அங்கு இரண்டாம் இடம்தான். 
 
கபாலியின் கேரளா உரிமை 6 கோடிக்கும், தெறியின் உரிமை 6.5 கோடிக்கும் விலை போனதாக சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
 
எனினும், இரு படங்களின் தயரரிப்பாளராகிய தாணு சொல்வதுதான் இறுதி உண்மையாக இருக்கும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்