தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, வசூலில் சக்கைப்போடு போட்ட படம் ‘பாகுபலி’. அந்த படம் இதுவரை எந்த படமும் எடுக்காத வசூலை பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் கபாலி. இந்தப் படம் பாகுபலியை முறியடித்து விட்டது. பாகுபலியின் மொத்த வசூலை கபாலி முறியடிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவில் திரையிடப்பட்ட பிரீமியர் காட்சியின் வசூலில்தான் கபாலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் பிரீமியர் காட்சியில் பாகுபலி ரூ.1.39 கோடி வரை வசூலித்தது. ஆனால், கபாலி முதல் நாளிலேயே ரூ.1.45 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.