காவியத்தலைவன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

வெள்ளி, 24 அக்டோபர் 2014 (15:05 IST)
காவியத்தலைவன் படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வசந்தபாலன் இயக்கியிருக்கும் காவியத்தலைவனில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முப்பதுகளில் இருந்த நாடகக் கம்பெனிகள் மற்றும் நாடக நடிகர்களின் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கே.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வேடம் வேதிகாவுக்கு.
 
சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் நவம்பர் 14 திரைக்கு வருகிறது. ஐ, அனேகன் உள்பட அரை டஜன் பெரிய படங்கள் நவம்பரில் வெளியாக உள்ள நிலையில் தைரியமாக காவியத்தலைவனின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
 
கண்ணன் இயக்கத்தில் விமல், ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா நவம்பர் 7 திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்