காவியத்தலைவனுக்குப் போட்டியாக வெளிவரும் திருடன் போலீஸ்

சனி, 25 அக்டோபர் 2014 (12:17 IST)
வசந்தபாலனின் காவியத்தலைவன் நவம்பர் 14 திரைக்கு வருகிறது. அதேநாள் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடித்துள்ள திருடன் போலீஸ் படமும் திரைக்கு வரவுள்ளது. 
திருடன் போலீஸ் படத்தை கார்த்திக் ராஜு என்பவர் இயக்கியுள்ளார். தசாவதாரம் உள்பட பல படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் சைடில் வேலை பார்த்தவர் இவர். இவரது முதல் படம்தான் திருடன் போலீஸ். 
 
யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை எஸ்.பி.பி.சரணின் கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸ் தயாரித்துள்ளது. கதைப்படி தினேஷ் மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார்.
 
கேப்பிடல் ஃபிலிம் வொர்க்ஸின் சென்னை 28, ஆரண்யகாண்டம் போன்ற படங்களில் தமிழ் சினிமாவின் மைல் கற்களாக அமைந்தன. அப்படியொரு சாதனையை திருடன் போலீஸ் செய்யுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்