சிகரத்தில் இருந்தாலும் சின்ன சத்தமில்லை மணிரத்னத்திடம். போஸ்டர், விழா, மேடை, மைக், தம்பட்டம் எதுவுமில்லாமல் வழக்கமான அமைதியுடன் தொடங்கி முடிந்திருக்கிறது, காற்று வெளியிடை.
கார்த்தி, அதிதி ராவ் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் டீஸர் 2017 ஜனவரி 1 -ஆம் தேதி வெளியாகிறது. ரஹ்மான் ரசிகர்களுக்கும், மணிரத்னம் ரசிகர்களுக்கும் இந்த டீஸர் புத்தாண்டு பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.