இளையராஜா படத்தின் பின்னணி இசையை வெளியிட்ட பாக்யராஜ்!

புதன், 2 மார்ச் 2022 (17:11 IST)
இளையராஜா இசையில் உருவாகியுள்ள உலகம்மை படத்தின் பின்னணி இசையை பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளர் சு சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை திரைக்கதையாக்கி உலகம்மை என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இதில் மையக் கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடிக்க, மித்ரன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய் பிரகாஷ் இயக்குகிறார்.

இசைஞானி இளையாராஜா இசையமைத்த்ள்ள இந்த படத்தின் பின்னணி இசையை இன்று இயக்குனர் கே பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்