ஜோதிகாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் குரலும் தமிழும்

புதன், 3 ஜூன் 2015 (09:13 IST)
மலையாள நடிகைகள் இரண்டாவது படத்திலேயே தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுகின்றனர். வடக்கேயிருந்து வரும் நடிகைகள் தமிழகத்தில் வாழ்க்கைப்பட்டாலும் தமிழ் அவர்களுக்கு வணங்குவதில்லை.
ஜோதிகா நடிக்க வந்து பல வருடங்களாகி இங்கேயே திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். அவரது மாமனார் தமிழகம் அறிந்த தமிழார்வலரில் ஒருவர், சிறந்த மேடைப் பேச்சாளர். ஆனால், மருமகளுக்கு இன்னும் தமிழ் தகராறுதான்.
 
36 வயதினிலே படத்திலும் ஜோதிகாவுக்கு டப்பிங் வேறொருவர்தான் பேசியிருக்கிறார். தமிழ்தான் தெரியுமே பேசிப் பார்ப்போம் என்று முயன்றபோது, உச்சரிப்பில் அந்நியத்தன்மை இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டதாக ஜோதிகா கூறினார்.
 
தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. முயற்சி திருவினையாக்கும். முயற்சியை கைவிடாதீங்க, தமிழ் உங்களை கைவிடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்