சென்சாரின் கத்திரி படாமல் வெளியாகும் 36 வயதினிலே

வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (09:44 IST)
8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியாகும் படம், 36 வயதினிலே. ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை, மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே இயக்கியிருந்தார். தயாரிப்பு, சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்.
 

 
இந்தப் படம் சமீபத்தில் சென்சாருக்கு திரையிடப்பட்டது. ஒரு காட்சியை கூட கட் செய்யாமல் க்ளீன் யு சான்றிதழ் தந்துள்ளது சென்சார்.
 
மே 15 ரோமியோ ஜுலியட், சூர்யாவின் மாஸ் ஆகிய படங்களுடன் இதுவும் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்