ஜோதிகாவின் ரீ என்ட்ரி படம் 36 வயதினிலே

திங்கள், 9 மார்ச் 2015 (10:13 IST)
மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் வெளியான படம், ஹவ் ஓல்ட் ஆர் யூ? மஞ்சு வாரியர் பதினான்கு வருடங்களுக்குப் பிறகு நடித்த படம்.
 

 
இந்தப் படத்தை தமிழில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்தது. ரோஷன் ஆண்ட்ரூவே படத்தை இயக்கினார்.
 
34 தினங்களில் முடிந்த இந்தப் படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். ஜோதிகாவின் தோழியாக அபிராமி. 
 
இந்தப் படத்துக்கு 36 வயதினிலே என பெயர் வைத்துள்ளனர். மே மாதம் படம் திரைக்கு வரவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்