அமேசான் ப்ரைமில் வெளியாகும் பஹத் பாசிலின் ஜோஜி… கவனத்தை ஈர்த்த டிரைலர்!

வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:31 IST)
இயக்குனர் திலிஷ் போத்தனும் பஹத் பாசிலும் மூன்றாவது முறையாக ஜோஜி என்ற படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் திலேஷ் போத்தன் அறிமுகமான முதல் படமான மகேஷிண்ட பிரதிகாரம், மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களுக்கே மிகவும் பிடித்த படமாக அமைந்து திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது. அதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்த தொண்டிமுதலும் திருச்ஷாட்சியும் திரைப்படமும் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

இதையடுத்து இப்போது இருவரும் மீண்டும் இணைந்து ஜோஜி என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்போது அதன் டிரைலர் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைமில் நேரடியாக ஏப்ரல் 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்