மாஸ்டர் தயாரிப்பாளர் வீட்டில் திடீர் பிரச்சனை: பஞ்சாயத்து செய்தாரா விஜய்?

திங்கள், 27 ஜனவரி 2020 (21:29 IST)
தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ வீட்டில் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனை விஜய் பஞ்சாயத்து செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது 
 
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் என ஜான் பிரிட்டோ முதலில் கூறப்பட்டாலும், அதன்பின்னர் அவர் ஒரு சில நாட்களிலேயே அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது இந்த படத்தை லலித் என்பவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தகவல் படக்குழுவினர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்ததாக இருந்தது
 
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதால் வருமான வரித்துறையினர் இந்த வியாபாரத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும் விரைவில் தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து தகவல் அறிந்த ஜான் பிரிட்டோ குடும்பத்தினர் மாஸ்டர் படத்தில் இருந்து விலகியதை அதிகாரபூர்வமாக அறிவித்து விடுங்கள் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஜான் பிரிட்டோ குடும்பத்தின் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட விஜய், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜான் பிரிட்டோ குடும்பத்தினரை சமாதானப் படுத்தியதாக கூறபடுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்