ஜிகர்தண்டா திருட்டு டிவிடி - நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகார்

புதன், 6 ஆகஸ்ட் 2014 (14:14 IST)
தமிழ் சினிமாவுக்கு வில்லனாக இருப்பது திருட்டு டிவிடி. இந்த வில்லன் காரணமாக திரைப்படங்கள் தங்களின் வருவாயில் கணிசமான பகுதியை இழக்கின்றன.
சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜிகர்தண்டா படத்தில் திருட்டு சிடி மற்றும் டிவிடிகள் தமிழகமெங்கும் பரவலாக கிடைக்கிறது. சில இணையதளங்கள் படத்தை முழுமையாக டவுன்லோட் செய்ய வசதி செய்துள்ளது.
 
இந்த திருட்டுகள் காரணமாக படத்தின் வசூலில் கணிசமான பகுதியை தயாரிப்பாளர் இழக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
 
தயாரிப்பாளர் கதிரேசன், தாணு, டி.சிவா, சித்ரா லட்சுமணன், வி.சேகர் உள்ளிட்டவர்கள் சென்னையிலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் தந்தனர். 
 
புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்