கன்னட கிருஷ்ண லீலா ரீமேக்கில் ஜீவா

திங்கள், 27 ஏப்ரல் 2015 (15:29 IST)
கன்னடத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம், கிருஷ்ண லீலா. அஜய் ராவ் தயாரித்து நடித்திருந்த இந்தப் படத்தை ஷஷாங்க் இயக்கியிருந்தார்.
 
கர்நாடகாவில் கிருஷ்ண லீலா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி வாங்கியுள்ளார். விரைவில் அவரது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் அப்படத்தை தயாரிக்க உள்ளது. ஜீவா அஜய் ராவ் நடித்த வேடத்தை தமிழில் செய்யவுள்ளார்.
 
தற்போது அவர் டிகே இயக்கத்தில் கவலை வேண்டாம் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ராம்நாத் இயக்கத்தில் திருநாள் படத்தில் நடிக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்