கதாபாத்திரத்துக்காக மொட்டையடித்த ஜெயராம்

திங்கள், 30 மே 2016 (17:48 IST)
நடிகர் ஜெயராம் திடீரென்று மொட்டைத் தலைக்கு மாறியுள்ளார். படத்துக்காக அவர் மொட்டையடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

 
 
சில தினங்கள் முன்பு, கேரளாவில் கற்பழித்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார் ஜெயராம். அப்போது தலைமுடியுடன் இருந்தவர் திடீரென்று மொட்டைக்கு மாறியுள்ளார். 
 
தெலுங்கில் பாகுபலி போலவே பாஹ்மதி என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. அனுஷ்கா, பிரபாஸ் என்று பாகுபலி இணையே இதிலும் நடிக்கிறது. இந்தப் படத்தில் ஜெயராமுக்கு முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. 
 
அதற்காகவே அவர் மொட்டையடித்திருப்பதாக கூறுகிறார்கள். 
 
பாகுபலியில் கட்டப்பா கதாபாத்திரத்துக்காக சத்யராஜ் மொட்டையடித்தார். பாஹ்மதியில் ஜெயராம் மொட்டை அடித்துள்ளார். 
 
விரைவில் பாஹ்மதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்