விஜய், அஜித் மெளனம் காப்பது ஏன்? ஜெயம் ரவி கேள்வி!!

வெள்ளி, 7 ஜூலை 2017 (16:59 IST)
நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் சினிமா துறையினரையும் பாதித்து உள்ளது.


 
 
சினிமா தியேட்டர்களுக்கு 28% வரி விதித்துள்ளது மத்திய அரசு. தமிழக அரசு கேளிக்கை வரியாக 30% விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பெரிய நடிகர்களான விஜய், அஜித் குரல் கொடுக்காதது ஏன் என வருத்ததுடன் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயம் ரவி.
 
மேலும் அவர், திரையுலகினருக்கு பிரச்சனை ஏற்படும் போது அதனை அனைவரும் ஒன்று நின்று சமாளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்