தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை - லிங்காவின் பிராந்திய சாதனை

புதன், 26 நவம்பர் 2014 (12:26 IST)
லிங்கா படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
 
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் லிங்கா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலை கொடுக்க விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் தயாராக உள்ளன. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெறுவதிலும் கடும்போட்டி நிலவியது.
எப்படியாவது லிங்காவின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிவிட வேண்டும் என்பதில் சன் முனைப்பு காட்டியது. 28 கோடிகள்தர சன் தரப்பு தயாரானது. எந்த பிராந்திய மொழி படத்துக்கும் இவ்வளவு அதிக தொகை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக வைக்கப்பட்டதில்லை. ஆனால் ஆச்சரியத்தை அதிகரிக்கும் விதமாக சன்னை முந்திக் கொண்டு 32 கோடிகளுக்கு ஒளிபரப்பு உரிமையை கையகப்படுத்தியது ஜெயா தொலைக்காட்சி. பிராந்திய மொழிப் படங்களில் இதுவொரு மைல்கல் சாதனை.
 
பிராந்திய மொழி என்று குறிப்பிடக் காரணம் இந்தியில் அமீர்கான், சல்மான்கான் போன்றவர்களின் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஐம்பது கோடிகளைத் தாண்டி விற்கப்பட்டு வருகிறது. அமீர்கானின் பிகே படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு மட்டும் 65 கோடிகள் தரப்பட்டதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்