தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இப்படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அண்மையில் டிரெய்லர் வெளியானது.
மேலும் துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் புதிய இயக்குனர் மூலம் படத்தை இயக்கப்போவதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் புதிய வர்மா படத்தை இயக்க, கவுதம் வாசுதேவ் மேனனிடம் பட தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே வர்மா படத்தில் மேகா சவுத்திரி ஹீரோயினாக நடித்து இருந்தார். அவரை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.