ஜல்லிகட்டு நடத்தினால் ஆதரவளிப்பாரா மோடி? - கரு. பழனியப்பன் கேள்வி!

வியாழன், 19 ஜனவரி 2017 (16:45 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வலுப்பெற்று இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.

 
மோடியை சந்தித்த பின்னர், பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக  அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது: மாநில அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்பேன் என்று கூறும் பிரதமர் மோடி என்ன சொல்ல  வருகிறார். அப்படியானால் மாநில அரசு ஜல்லிக்கட்டை நடத்தினால் அதற்கு மத்திய அரசு துணை நிற்குமா? என இயக்குனர்  கரு. பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இளைஞர்கள் போராட்டகளத்தில் அமைதியாக இருக்கிறார்கள், இந்திய அரசியலில் எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும்  மூன்று மணி நேரத்தில் வன்முறையில் வந்து முடிந்துவிடும். ஆனால் நான்கு நாட்களாக மாணவர்கள் அமைதியான  போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் இருட்டில் தேள் கொட்டியது போல் அமைதியாக இருக்கிறார்கள். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்