ஜெய் ஆகாஷ் இயக்கி நடிக்கும் நான் யார்

திங்கள், 2 மார்ச் 2015 (14:35 IST)
அவ்வப்போது பத்திரிகையாளர்களை அழைத்து ஒரே நேரத்தில் நாலைந்து படங்களை அறிமுகப்படுத்துவார் ஜெய் ஆகாஷ். அவர் இயக்கி நடிக்கும் படம்தான், நான் யார்.
 
லண்டனில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் வேலை கிடைத்து, புதுமனைவியுடன் லண்டன் செல்லும் ஜெய் ஆகாஷ், ஒரு விபத்தில் முளை பிசகிப் போய் தான் யார் என்பதையே மறந்து, பலமொழிகள் பேசித் திரிகிறார். அவருக்கு ஏற்பட்டது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி.
 
எல்லாம் மறந்துபோன நிலையில் அந்த சதியை ஜெய் ஆகாஷ் எப்படி கண்டுப்பிடிக்கிறார் என்பதுதான் கதை.
 
ஜெய் ஆகாஷின் புது மனைவியாக லண்டன் மாடல் ப்ரியா நடிக்கிறார். படத்தில் கார் சேஸிங், ஹெலிகாப்டர் பைட், ஹார்பர் சண்டைக் காட்சி என காஸ்ட்லி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ளனவாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்