ஓடிடி ரிலீஸால் ‘ஜகமே தந்திரம்’ தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடி லாபமா?

ஞாயிறு, 13 ஜூன் 2021 (19:33 IST)
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் ரூபாய் 10 கோடி லாபம் என்று தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூபாய் 55 கோடி என்றும் ஆனால் ஜகமே தந்திரம் படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிய தொகை மற்றும் ஆடியோ ரைட்ஸ் ஹிந்தி டப்பிங் உரிமை மற்றும் இங்கிலாந்து நாடு கொடுக்கும் மானியம், சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவை கணக்கிட்டு பார்க்கும்போது  தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடி லாபம் என்றும் கூறப்படுகிறது 
 
ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் கூட இத்தனை கோடி தயாரிப்பாளருக்கு லாபம் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் தியேட்டரில் இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது தனுசுக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் கூறப்பட்டு வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்