பாபான்னாலே நடுங்கிடுவேன் : சிவகார்த்திகேயன் உதறல்

ஞாயிறு, 1 மே 2016 (08:45 IST)
த்ரிஷா நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆகப்போகிறது. இப்போது போய், நடிப்பு பயம் போய்விட்டதா என்று கேட்டுப் பாருங்கள். அதெல்லாம் அப்பவே போயாச்சு, ஆனா, நடனம் ஆடணும்னு சொன்னாதான் திக்குன்னு பயமா இருக்கும் என்பார்.


 


சினிமாவில் நடனம் என்பது கொடூரமான விஷயம். அஞ்சு நிமிஷப் பாட்டுக்கு நாலுநாள் பெண்டை கழற்றிவிடுவார்கள். 
 
த்ரிஷாவே அப்படியென்றால் சிவகார்த்திகேயன் எந்த மூலை.
 
"சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை, காதல் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
 
ஆனால் நடனம் ஆடவேண்டும் என்றாலே நடுங்கி விடுவேன். இதுவரை அந்த நடுக்கம் போகவில்லை. பாபா மாஸ்டர் நடனம் அமைத்தால் காலை முதல் இரவு வரை ஆட வேண்டியது இருக்கும். மிகவும் சிரமப்பட்டு ஆடுவேன். இந்த அளவுக்கு வேலை வாங்குவார். என்றாலும் அவர் சொல்லிக் கொடுத்த நடனங்கள் மான் கராத்தே, ரஜினி முருகன் படங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன" என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
 
பேசாம ஹாலிவுட் போயிடுங்க. அங்க நடனமே கிடையாது ஜமாய்க்கலாம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்