வி பி எஃப் கட்டண சர்ச்சை சமாதானமா? நவம்பர் 10 ஆம் தேதி நிலை!

வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:32 IST)
விபிஎப் கட்டணத்தை யார் கட்டுவது என்ற சர்ச்சையில் இப்போது சமாதானமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் வெளியாகாமல் கிடப்பில் கிடப்பதால் திரைத்துறையினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் விரைவில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள பாரதிராஜா “தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விபிஎஃப் எனப்படும் Virtual Print Fee யை நீக்கினால் மட்டுமே படம் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், பாரதிராஜாவின் அறிவிப்பால் பட வெளியீடுகள் மேலும் தள்ளி போகுமோ என ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு தரப்பும் நடத்திய பேச்சுவார்த்தயில் தற்போது ஒரு சுமுக நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தீபாவளியை முன்னிட்டு படங்கள் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்