சினேகா கர்ப்பம் - பிரசன்னா சூசக தகவல்

புதன், 15 ஏப்ரல் 2015 (11:34 IST)
நடிகை சினேகா, பிரசன்னா திருமணம் கடந்த 2012 -இல் நடந்தது. அதன் பிறகு ஓரிருமுறை சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என வதந்தி கிளம்பி, அப்படியெல்லாம் இல்லப்பா என்று சினேகாவும், பிரசன்னாவும் மறுத்தனர். ஆனால் இந்தமுறை அப்படியில்லை.

பிரசன்னா தனது ட்விட்டர் செய்தியில், இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருத்தர் வருகிறார் என கூறியுள்ளார். விரைவில் சினேகாவுக்கு குழந்தைப் பிறக்க இருப்பதைதான் இப்படி சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
 
நட்சத்திர தம்பதிகளுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்