விஜய்யின் 69 படத்தை இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (10:09 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் காலப்பயணம் பற்றிய கதைக்களன் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்குப் பிறகு விஜய் சினிமாவுக்கு சில ஆண்டுகள் ப்ரேக் எடுத்துக்கொண்டு அரசியல் பணிகளில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்போது விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இருமுறை விஜய்யை சந்தித்து கதை சொல்லி, அந்த கதைகள் விஜய்க்கு பிடிக்கவில்லை என கார்த்திக் சுப்பராஜே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்